தென்காசியில் தவற விட்ட தங்க சங்கிலியை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுதெடுத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி பகுதிக்கு அருகே சொக்கம்பட்டி சலவையாளர் தெருவை சேர்ந்தவர்கள் ரியாஸ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா. கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியன்று புளியங்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திடீரென காணவில்லை. இதனால் அவர் போலீசுக்கு புகார் அளித்துள்ளார். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்படி, புளியங்குடி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதனின் விசாரணையை மேற்கொண்டார். .
சுவாமிநாதனின் தலைமயில் அமைந்த முத்துக்குமார், புகழேந்தி ,விஜய பாண்டியன் ஆகிய தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள 40 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். இதில் ராயகிரி பகுதியை சேர்ந்த 55 வயதுடைய முருகன் என்பவர், கீழே விழுந்து உள்ள தங்கச்சங்கிலியை எடுத்துள்ள காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அவரிடமிருந்து தங்கச்சங்கிலியை மீட்ட போலீசார் ,ரியாஸின் குடும்பத்திடம் ஒப்படைத்தனர். தங்க நகையை மீட்டியதற்காக போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகள் தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.