Categories
உலக செய்திகள்

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரியாணி… உலகிலேயே மிக விலை உயர்ந்த பிரியாணி இதுதான்…!!!

உலகிலேயே தங்கத்தைவிட அதிக விலை கொண்ட பிரியாணி துபாயின் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உட்கொள்ளும் உணவில் சைவம் மற்றும் அசைவ இரண்டுமே உள்ளது. அதில் அசைவப் பிரியர்களே அதிகம். அதிலும் குறிப்பாக அசைவ பிரியர்கள் பிரியாணியை மிகவும் விரும்புவார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பும் பிரியாணி சாலையோர கடைகளில் 60 ரூபாய்க்கும், மிகப் பெரிய ஹோட்டல்களில் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனையும் தாண்டி தங்கத்தை விட உயர்ந்த விலையில் ஒரு நாட்டில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

துபாயில் உள்ள பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரண்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிகவிலை கொண்ட பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. அந்த பிரியாணியில் 23 கேரட் சாப்பிட கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பிளேட் அலங்கரிக்கப்பட்ட பிரியாணியின் விலை ரூ 20,000 என்றும் இதனை ஆறு நபர்கள் வரை சாப்பிட முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவகம் துபாயில் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ராயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |