தமிழகத்தில் தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை செய்யப்படுவதால் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மணலின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.