உங்களுக்கு லாபம் தரும் தங்க நிதி திட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
தங்கம் என்றால் தங்க நகை, தங்க நாணயம், தங்க கட்டி என்று இல்லாமல் தற்போது நவீன முதலீட்டு முறைகள் வந்துள்ளது. அதிலும் கோல்டு ஃபண்ட் எனப்படும் தங்க நிதிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தங்க நிதி என்றாள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தங்க நிதி என்பது தங்கத்தில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பொதுவாக பங்குகள், அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.
தங்க நிதி திட்டங்களோ, முழுக்க முழுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். நேரடி தங்கம், தங்க இடிஎஃப், தங்க பத்திரங்கள், தங்க சுரங்க நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்த பங்குகள் உள்ளிட்டவற்றில் நிதி திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. பல நேரத்தில் பங்குசந்தை சரிவது வழக்கம். ஆனால் அப்போது கூட தங்க திட்டங்கள் ராக்கெட் வேகத்தில் உயரும். இதெல்லாம் போக இந்தியர்கள் பாரம்பரியமாகவே தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வந்துள்ளனர். எனவே நீங்களும் தங்கத்தில் முதலீடு செய்ய தங்க நிதி திட்டங்களை பரிசோதிக்கலாம். தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் சில திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
1. SBI Gold Direct-G
2. Aditya Birla SL Gold Direct – G
3. Kotak Gold Direct – G
4. Axis Gold Direct – G
5. Quantum Gold Savings Direct – G
6. HDFC Gold Direct-G
7. Nippon India Gold Savings Direct-G
8. ICICI Pru Regular Gold Savings (FOF) Direct-G
9. Invesco India Gold Direct-G
10. IDBI Gold Direct-G