மிகப்புகழ்பெற்ற தனிஷ்க் நிறுவனம் மக்களுக்காக தனிஷ்க் கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கு என்ற மாதாந்திர தங்க சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் 2000ரூபாய் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்துகொள்ளலாம். அவ்வாறு முதலீடு செய்ய விரும்புவோர் தனிஷ்க் ஷோரூமுக்கு நேரடியாகச் சென்று தங்கள் பணத்தை செலுத்தலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள் மொபைல் ஆப்பில் முதலீடு செய்துகொள்ளலாம். மேலும் மெச்சூரிட்டியின் போது முதலீட்டாளர்கள் முதல் தவணை பணத்தில் இருந்தே 75 சதவீதம் தள்ளுபடி பெறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு 10 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யப் பட்டிருக்கும். 13 ஆவது மாதத்தில் 21,500 ரூபாய் மதிப்புள்ள தங்கம் அல்லது அதற்கு இணையான பயன்களை ஏற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி கணக்கு திறக்கப்பட்ட தேதியில் இருந்து 400 தினங்களில் கட்டாயமாக கணக்கை மூடி இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முதலீடு செய்யலாம். முதல் தவணையை செலுத்தி விட்டால் பிறகு தவணைத் தொகை மாற்ற முடியாது. நாடு முழுவதும் இருக்கும் இந்த சேவையை அனைவரும் பெறலாம். அதில் ஆன்லைன் சேவையும் உண்டு.