Categories
தேசிய செய்திகள்

தங்கத்தை இப்படி வாங்கினால்…. நல்ல வருமானம் கிடைக்கும்…. இதற்கு இன்றே கடைசி நாள்…!!!

தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் தங்க முதலீடு பாத்திரங்களை வாங்குவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த முறை கிராமிற்கு ரூ.4912 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கி பயன் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் விலை உயர உயர வட்டி மூலமாக நமக்கு லாபமும் கிடைக்கும். இந்த தங்க பத்திரங்களை வாங்கி எட்டு வருடங்களாக வைத்துக்கொள்ளலாம். எட்டு வருடங்கள் முடிவுக்கு பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு எட்டு வருடங்கள் காத்திருக்க முடியாது என்றாலும் அவசரத் தேவைக்கு தேவைப்பட்டால் ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்த பத்திரத்தை வைத்து பணத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த சமயத்தில் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும்.

தங்க முதலீட்டுக்கான விற்பனை அறிவிப்பை ஜூலை-12 முதல் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று வரை நீங்கள் தங்க பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். ஆன்லைன் மூலமாக வாங்கினால் கிராமிற்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4807 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வெளியீட்டில் தங்க பத்திரத்தின் விலை ரூ.4889ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |