Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணி…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

கேரளாவில் தென் மண்டை அளவிலான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக அணியில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சோனாரேசலின் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். இதில் தமிழக அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

மேலும் அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெற இருக்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது. அந்த அணியில் மாணவி சோனாரேசலினும் இடம் பெற்றுள்ளார். இதனையடுத்து சாதனை படைத்த மாணவியை பள்ளியின் தலைவர் பிரசன்னா, செயலர் கோபிநாத், முதல்வர் ஆதியப்பன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |