சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து 33,448ரூபாய்க்கு விற்பனையாகிறது .
நாளுக்கு நாள் ஏற்ற – இரக்கத்தை சந்தித்துவரும் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த வகையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 36 ரூபாய் குறைந்து, 4572 ரூபாய்க்கும் , சவரனுக்கு 288ரூபாய் குறைந்து, 36,576ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36ரூபாய் குறைந்து, 4181 ரூபாய்க்கும், சவரனுக்கு 288ரூபாய் குறைந்து 33,448ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் குறைந்தது, 69 ரூபாய் 80காசுகளும், ஒரு கிலோ பார் வெள்ளி 600 ரூபாய் குறைந்து 69,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் நகை கடை நோக்கி படையெடுக்கின்றனர்.