இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில் சில நாட்களாக குறைந்து வருகிறது. முன்னதாக 31 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கம் மீண்டும் குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சரிந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 136 குறைந்து ரூ 31016 க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 17 குறைந்து ரூ 3877 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் குறைந்து ரூ 49.80 க்கு விற்பனை ஆகிறது.