Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.50 ஆயிரத்தை தாண்டும் ? விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தங்கத்தின் விலை 39 ஆயிரம் ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உயர்வுக்கான காரணமென்ன ? இந்த விலை உயர்வு இப்படியே  நீடிக்குமா ? விரிவாக பார்க்கலாம்.

கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் தங்கம் வழக்கம்போல தனித்தன்மையுடன் ஜொலிக்கிறது. நாடெங்கும் முதல் பொதுமுடக்கம் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள் சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 3961 ரூபாயாக இருந்தது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தங்கம் விலை கிராமுக்கு 4 ஆயிரத்து 885 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதாவது நான்கு மாதங்களில் கிராமுக்கு 924 ரூபாயும், சவரனுக்கு 7392 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை 9 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இந்த உயர்வு இன்னும் 2 ஆண்டுகளில் கிராமுக்கு ரூ.6500 அதாவது சவரனுக்கு ரூ.52,000 என்ற அளவை எட்டும் வாய்ப்பு உள்ளதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நலிவு, டாலர் மதிப்பு குறைவு, பல்வேறு முதலீடுகளில் வட்டி விகிதங்கள் கடுமையாக சரிந்தது ஆகியவற்றால் உலக அளவில் தங்கம் நம்பகமான முதலீடாக மாறி இருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகவே அதை பலரும் அதிக அளவில் வாங்கி இருப்பு வைப்பதாகவும், இதுவே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று  குறைந்து தடுப்பூசி சந்தைக்கு வரும் வரை தங்கம் விலை உயர்வை எதுவும் தடுக்க முடியாது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்

Categories

Tech |