சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு 560 சரிந்து 33 ஆயிரத்து 440 விற்பனை செய்து வருகிறது.
ஊரடங்கு காலத்தில் பொருளாதார இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.
காலையில் ரூ.4,207 விற்பனையாகி ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூ.4,180-க் விற்பனையாகிறது. அதே சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 440 விற்பனை செய்து வருகிறது. அதே போல் வெள்ளி விலை 2.50 பைசா குறைந்தது ரூ. 70. 70 காசுக்கு விற்பனை ஆகி வருகிறது.