தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து மக்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலையில் இன்றும் புதிய உச்சம் தொட்டு உள்ளது. சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5 ஆயிரத்து 64 ரூபாய்க்கும் ஒரு சவரன் 40 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 42 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது வெள்ளி ஒரு கிராம் 71 ரூபாய் முப்பது காசுகளுக்கும், ஒரு கிலோ 71 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.