தங்கம் விலை ஒரு சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, சமீப காலமாக ஏற்ற இறக்க நிலையாக காணப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்தது. இதன் காரணமாக சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 28,976 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து 3,622 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேசமயத்தில், வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி இன்றும் அதை விலையில் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராமுக்கு 47.30 காசுகளுக்கு விற்பனைசெய்யப்பட்டது.ஒரு கிலோ பார் வெள்ளி 47,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.