தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் தேதியில், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதன் பின்னர் தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,790-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து, ரூ.60.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.