தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை கிராமிற்கு 31 ரூபாய் உயர்ந்து. சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 881 ரூபாய்க்கும், ஒரு சவரன் 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 66 ரூபாய் 70 காசுகளுக்கும் ஒரு கிலோ 66 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.