தங்க முதலீட்டு பத்திர விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இதன் விலை மற்றும் இதர அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வெளியிடப்படும். தங்க பத்திர திட்டத்தில் செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் சுமை எதுவும் கிடையாது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக முதலீடு செய்கின்றனர். இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. நீங்கள் முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த திட்டத்தில் சேருவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தை வாங்கி 8 ஆண்டுகள் வரை நாம் வைத்திருக்க முடியும்.
எட்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியது இல்லை. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்று கூறுபவர்கள் அவசரத் தேவை ஏற்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக இந்த பத்திரத்தை வாங்கினால் கிராமுக்கு ஐம்பது ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. இது 21ஆம் தேதி வரையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் விரைவில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான நான்காவது பிரிவு விற்பனை அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இன்று இந்த விற்பனை இன்று தொடங்குகிறது. ஜூலை 16ஆம் தேதி வரை நீங்கள் இதில் முதலீடு செய்துகொள்ளலாம். இந்த முறை பத்திரத்திற்கான விலை கிராமுக்கு ரூபாய் 4807 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய விற்பனையில் தங்க முதலீட்டு பத்திரத்தின் விலை கிராமுக்கு 4889 ஆக இருந்தது. இந்த திட்டம் தற்போது 2021 மார்ச் மாதம் வரை மொத்தம் 25 ஆயிரத்து 602 கோடி வரை திரட்டபட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.