Categories
பல்சுவை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 272 உயர்வு… இன்றைய விலை நிலவரம் இதோ…!!!

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 பவுன் ரூ.38,352-க்கு விற்கப்பட்ட தங்கம் தொடர்ந்து 2 நாட்கள் அதிகரித்துள்ளது.அதன்பிறகு கடந்த 26, 27-ந்தேதிகளில் ரூ.38,752 என்ற விலையில் நீடித்தது. அதன் பின்  விலை குறையத் தொடங்கி 28-ந்தேதி ரூ.38.528-க்கும், 29-ந்தேதி ரூ.38,344-க்கும், 30-ந்தேதி ரூ.38,320 ஆகவும் விற்பனையானது.

நேற்று மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது. நேற்று பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38,400-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.272 அதிகரித்து ரூ.38,672 ஆக விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு ரூ.34 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,834-க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.71.50-க்கு விற்கப்பட்ட வெள்ளி இன்று 20 காசுகள் அதிகரித்து ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.71,700 ஆக விற்பனையாகிறது.

Categories

Tech |