தங்கம், வெள்ளி, ரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட டெலிவரி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி ஜூலை 12ஆம் தேதி வெளியிட்டது. கட்டுப்படுத்தப்பட்ட டெலிவரி பட்டியலில் ஏற்கனவே மருந்துகள், சிகரெட் மற்றும் பழங்கால பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் தங்கம், வெள்ளி, ரத்தின கற்கள் மற்றும் நகைகள் வைக்கப்படுகிறது.
இனி அரசின் கவனத்திற்கு செல்லாமலே அரசு அதிகாரியின் கண்காணிப்பில் இல்லாமல் தங்கம், வெள்ளி, ரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய, இறக்குமதி செய்ய முடியாது. அரசின் கண்காணிப்பில் மட்டுமே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய இயலும். ஒரு அரசு அதிகாரியின் கண்காணிப்பில் இவை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும்போது சரக்கு மீது அதிகாரிக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் அந்த சரக்கு எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு டிராபிக் கருவி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.