சென்னை நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று மாணவி ஒருவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சென்னை வங்காளவிரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மாணவி மோகனா சாஜன் நடத்திய ஆய்வில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை” என்று தெரியவந்துள்ளது. மேலும் இரவு 7 மணி போல் தான் இரவு 10 மணிக்கும் உள்ளது. எந்த நேரத்திலும் பெண்கள் நடமாடலாம். சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பெண்கள் இரவு 11 மணி ஆனாலும் ரயில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலோ அல்லது நடந்தோ தைரியமாக வீடுகளுக்கு வரலாம் என்றும் தெரியவந்துள்ளது.