திருநெல்வேலியில் வாலிபர் விஷத்தை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் தனராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருடைய தங்கைக்கு சில வருடங்களாகவே திருமணம் நடக்காமல் இருந்திருக்கிறது. இதனால் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற தனராஜ் சம்பவத்தன்று நெல்லையிலிருக்கும் ஆற்றுப்பாலத்திற்கு அருகே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தனராஜ்ஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.