Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தங்கையின் தோழியை மிரட்டிய வாலிபர்…. கர்ப்பமான 8- ஆம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கொளப்பள்ளி பகுதியில் மனோஜ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கை உள்ளார். இந்த சிறுமி தனது தோழியின் வீட்டிற்கு சென்ற படிப்பது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு தங்கையின் தோழி வீட்டிற்கு சென்ற மனோஜ் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியே யாரிடமும் இதனை கூறக்கூடாது என மனோஜ் மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மனோஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஊட்டி மகிளா நீதிமன்றம் மனோஜுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், 23 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |