Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் அன்றே…. துடிதுடித்து இறந்த சகோதரிகள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எலவமலை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் மூத்த மகளான ஷாலினி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இளைய மகள் நிஷா அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு சகோதரிகள் லட்சுமி நகர் பகுதியில் இருக்கும் பஞ்சாபி ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு இரவு நேரத்தில் தனது சித்தி மகனான சுபாஷ் என்பவருடன் சகோதரிகள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இவர்கள் சேலம்-கோவை பைபாஸ் ரோடு லட்சுமி நகர் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி சுபாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷாலினி மற்றும் நிஷா ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் சுபாஷ் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகோதரிகளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |