Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தங்கையை காதலித்து திருமணம் செய்ததால்… நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல்… பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…!!

திருச்சியில் தங்கையை காதலித்து திருமணம் செய்ததால் நண்பர்களிடையே மோதல் ஏற்பட்டு என்ஜினியர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் கிருபன்ராஜ். இவருடைய மனைவி ராபின் ஷாமேரி இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது. இவர்  தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் தங்கையான கிரிஜாவை அவரது நண்பன் கவியரசன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த கிருபன்ராஜ் தன் தங்கைக்கு வேறொரு நபருடன் நிச்சயம் செய்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத கிரிஜா தன் காதலனான கவியரசனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எனவே கவியரசனுக்கும் கிருபன்ராஜ்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று கிருபன்ராஜ் கவியரசனின் வீடு வழியாக சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து கவியரசனும் அவரது சகோதரர்களும் சண்டையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்றிபோன நிலையில் கவியரசன் தான் வைத்திருந்த கத்தியால் கிருபன்ராஜை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

இந்நிலையியல் பலத்த காயமடைந்த கிருபன்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் தகவல் அறிந்து வந்த லால்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவியரசன் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |