Categories
தேசிய செய்திகள்

தங்கையை கொன்ற தாய்… ‘கழுத்தை அறுத்து கொலை செய்த அண்ணன்’….. பரபரப்பு சம்பவம்….!!!

கடப்பாவில் பெற்ற மகளை கொன்ற தாயை அவருடைய மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குர்ஷிதா. இவருக்கு சமீர் என்ற மகனும் அலிமா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அலிமா செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குர்ஷிதா கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாது அலிமா தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த குர்ஷிதா மகள் அலிமாவை அவர் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டாவால் அவர் கழுத்தை இருக்கியுள்ளார்.

இதனை பார்த்த மகன் சமீர் தாய் விளையாட்டாக தங்கையின் கழுத்தை இருப்பதாக நினைத்துள்ளார். தொடர்ந்து கழுத்து இறுக்கப்பட்டதால் இறந்த நிலையில் அலிமா கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த சமீர் தங்கையை எழுப்ப முயன்று உள்ளார். ஆனால் அவர் இறந்தததன் பிறகுதான் சமீர்க்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த சமீர் வீட்டில் இருந்த கத்தியால் அவருடைய தாயை கழுத்தை அறுத்து உள்ளார். இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குரிஷிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |