Categories
தேசிய செய்திகள்

தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்…. கர்ப்பமான 17 வயது சிறுமி தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…..!!!!

அவுரங்காபாத்தில் தனது சகோதரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாகப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் சிறுமியின் பெற்றோர் கடந்த புதன்கிழமை புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை ஒரு விவசாயி.புதன்கிழமை அன்று சிறு நீ பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. மகளிடம் சில மாற்றங்களை கண்டதும் தாய் விசாரித்துள்ளார்.

அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அந்த சிறுமி கூறியுள்ளார்.வீட்டிற்கு அருகே வசித்து வரும் 25 வயது உடைய உறவினர் சகோதரன் தன்னை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.அதாவது 9 மாதங்களுக்கு முன்பு அந்த இட நன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த போது வலுக்கட்டாயமாக சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளார். அந்த வாலிபர் சிறுவியை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். மேலும் சிறுமி உயிர் இழக்கும் போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |