Categories
உலக செய்திகள்

தங்க இடம் இல்லையா, கோவிலுக்கு வாங்க…. கனடாவில் இந்தியர்களின் பரந்த மனப்பான்மை…. காரணம் என்ன தெரியுமா….????

கனடாவில் புதிதாக வரக்கூடிய மாணவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லாததால் கோவிலை திறந்து வைக்கின்றனர் அங்கு வாழும் இந்தியர்கள். ஏற்கனவே நெருக்கடி அதிகம் உள்ள வடக்கு ஒன்றாரியோவை நோக்கி உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். அப்படி வருவோர் அங்கு தங்குவதற்கு அறைகள் கிடைக்கவில்லை என்றால் இந்தியர் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அவர்களுடைய பெற்றோர் timmins என்ற இடத்தில் உள்ள சீக்கிய கோவில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர்.

அதனால் எப்படியும் நம் பிள்ளைகளுக்கு அவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. சீக்கியர்கள் நடத்தும் தொண்டு நிறுவனம் ஒன்றின் அறங்காவலர்களில் ஒருவரும் இயக்குனருமான kanwaljit bains,தங்கள் கோவிலில் உள்ள அறைகளை இந்த பிள்ளைகளுக்காக திறந்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.ஒருவேளை இடம் பத்தாது அளவிற்கு மாணவர்கள் வந்துவிட்டால் கோவிலில் உள்ள அறைகளை கூட திறந்து கொடுத்து அதில் மெத்தைகளை போட்டு மாணவர்களை தங்க வைப்பதாக தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |