தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கேரளாவை உலுக்கியுள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோரை பெங்களூரில் நேற்று கைது செய்த NIA அதிகாரிகள் கொச்சியிலிருந்து இன்று மாலை 3 மணி கேரளா NIA அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் தற்போது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய NIA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பாக ஸ்வப்னாவின் குடும்பத்தினரை சட்டபூர்வ நடவடிக்கைக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களை வரவழைத்து இருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் இருவரையும் ஆஜர் படுத்திய பிறகு நேரடியாக அவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.