Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு ஸ்வப்னாவிடம் என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை ….!!

திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் ஸ்வப்னா சிவசங்கர் ஆகியோரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

கேரளா தங்க கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் உட்பட பத்திற்கு மேற்பட்டோரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வப்னாயுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள மாநில அரசின் மூத்த IAS அதிகாரியும், முதலமைச்சரின் முன்னாள் செயலாளருமான சிவசங்கர் பணியிடை நீக்கம் செயப்பட்டார். ஏற்கனவே அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இருவரிடமும் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இருவரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் தங்க கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டனர்.

Categories

Tech |