கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்தாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக இருந்த நிலையில் NIA அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர். அவரை இன்று மாலை கேரளா அழைத்துவந்த NIA அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷிடம் விசாரணை நடத்தினர். அவரோடு கைது செய்யப்பட்ட சந்தீபிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருவரையும் கொச்சியில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது. இதனிடையே இவர்கள் இருவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதால், இருவரும் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதன் பின்பு நீதிமன்றத்தில் NIA அதிகாரிகள் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு எடுப்பார்கள் என்று தெரிகிறது.