சேலம் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு ராஜ கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சேலம் டவுனில் அமைந்துள்ள ராஜ கணபதி கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து தங்க கவசத்தில் ராஜகணபதி சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் கூட்டம் அலைமோதியது.