Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தங்க காசுகள் விற்பனை…. நிறுவனத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

போலி நாணயங்ககளை விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தங்க நகைகள் அடகு வைக்கும் கடை ஒன்றுள்ளது. இந்த கடையில் லாடபுரம் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் தங்க நாணயங்ககளை  அடகு வைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். அதன்பின் அடகு கடையின் மேலாளர் விஜயசாந்தியிடம் 23 தங்க நாணயங்களை விற்றதற்காக 8,30,000 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.  இந்த தங்க நாணயங்களை  பெங்களூருவில் இருக்கும் முதன்மை நிறுவனத்திற்கு விஜயசாந்தி அனுப்பியுள்ளார். அங்கு தங்க நாணயங்களை  சோதனை செய்தபோது அது  போலியான தங்க நாணயங்கள்  என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் மேலாளர் பழனிச்சாமி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வரதராஜனை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பாலமுருகன் என்பவரின் ஆலோசனையின் பேரில் தான் போலி தங்க நாணயங்களை  விற்பனை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து பாலமுருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |