Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய பெண் கைது…!!

சென்னையில் ,அம்பத்தூரை அடுத்த மேனாம்பேட்டையில்   3 சவரன் நகையை பறித்து சென்ற  பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மேனாம்பேடு புறவழிச் சாலையில் பச்சையம்மாள் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார்.இந்நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வில்லிபாக்கத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரும் பொருள் வாங்குவது போன்று அந்த கடைக்கு சென்றனர். பச்சையம்மாள் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகள் பதிவான இரு சக்கர வாகன எண் உதவியுடன்ரேவதியை  கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராஜேஷையும்  தேடி வருகின்றனர். ராஜேஷ் வாங்கிய காருக்கு மாத தவணை செலுத்துவதற்காக இருவரும் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Categories

Tech |