Categories
தேசிய செய்திகள்

தங்க நகைய வச்சு கடன் வாங்கப் போறீங்களா….? இந்த விஷயங்களையெல்லாம் கட்டாயம் கவனிங்க….!!

நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

இந்தியர்களுக்கு நகை மீது எப்பொழுதுமே அதிக ஆர்வம் உண்டு. இது அழகு சாதனப் பொருளாக மட்டுமல்லாமல், சிறந்த முதலீடாகவும் உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை வாங்கி வைத்தால் பிற்காலத்தில் உதவியாக இருக்கும் என்று பலரும் எண்ணுகின்றனர். அதனால் சிறுக சிறுக சேமித்து தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் அவசர காலத் தேவைக்கு வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களிடம் நகையை வைத்து கடன் வாங்கிக் கொள்கின்றனர். தற்போது கொரோனா சமயத்தில் பலரும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்ட காரணத்தினால், நகையை வைத்து கடன் வாங்குகின்றனர். அவசர அவசரமாக நகையை வைத்து பணம் வாங்கும் நாம் இது தொடர்பான விவரங்களை பார்க்க தவறுகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவிகிதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம். எனவே, உங்களுக்கு அவசியம் தேவை எனில், அதிகமாகக் கடன் தரும் வங்கிகளையோ, நிதி நிறுவனங்களையோ நீங்கள் அணுகலாம்.

நகை கடன் என்பது மிகவும் குறுகிய கால கடன் ஆகும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான காலத்தில் தான் இந்த கடனை நாம் வாங்கமுடியும். அதற்குள் கடனை திரும்ப செலுத்த முடியுமா என்பதை முதலில் நீங்கள் யோசிக்கவேண்டும்.

தமிழகத்தில் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என்று 10,000-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் பெரும்பாலான வங்கிகளில் தங்க நகைக்கு அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது.

தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் துறை வங்கிகள் 8.5% முதல் 12% வரையிலான ஆண்டு வட்டியில் தங்க நகை அடமானக் கடன் வழங்குகின்றன. ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள் 12 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கின்றன.

வங்கி நிதி நிறுவனம் போன்ற பல இடங்களில் வாங்கிக் கொள்ளலாம். பொதுவாக வங்கிகள் நம்பிக்கையானவை. மற்ற இடங்களில் நீங்கள் நகை கடன் வாங்குவதற்கு முன்னதாக நிறுவனம் குறித்து நன்கு தெரிந்து கொள்வது அவசியம்.

குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்பதற்காக நாம் எதையும் விசாரிக்காமல் நகை கடனை வாங்கி விடக்கூடாது. நகையின் மொத்த மதிப்புக்கும் உங்களுக்கு கடன் கிடைக்காது. குறைந்தபட்சம் நகைக்கு 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கிடைக்கும்.

செயல்பாட்டு கட்டணம் வெவ்வேறாக இருக்கும். பொதுவாக வங்கிகளில் 2 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. எனவே செயல்பாடு கட்டணம் எவ்வளவு என்பதை பல்வேறு வங்கிகளில் ஒப்பிட்டுப் பார்த்து விட்டு வாங்கலாம்.

நீங்கள் நகை கடனை பெரும்பாலும் வங்கிகளில் வாங்குவது மிகவும் நல்லது. ஏனெனில் வங்கிகளில் நகை பாதுகாப்பாகவும் இருக்கும். குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும். மற்ற நிதி நிறுவனங்களிடம் நகைக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது.

Categories

Tech |