அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஷர்வாணிகா 2- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி இலங்கையில் நடைபெற்ற ஆசிய செஸ் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் 7 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நடைபெற்ற 3 பிரிவு போட்டிகளிலும் ஷர்வாணிகா வெற்றி பெற்று 6 தங்க பதக்கங்களையும், சுழற்கோப்பையையும் வென்றார். நேற்று குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஷர்வாணிகா அரியலூருக்கு வந்தார்.
இந்நிலையில் சாதனை படைத்த மாணவிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடையார்பாளையத்தில் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பட்டாசு வெடித்து சிறுமியை வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.