Categories
மாநில செய்திகள்

தசம மதிப்பெண்களை அப்படியே கணக்கில் கொள்ள…. தேர்வு இயக்ககம் முடிவு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாட்களாகவே முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தசம மதிப்பில் பெறும் மதிப்பெண்களை அப்படியே கணக்கில் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏராளமான மானவர்க்ளின் கட் ஆப் ஒரே ஒரே அளவில் இருக்கும் என்பதால் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |