பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் கடவுள் ராமர் தசரத மன்னனின் மகன் அல்ல எனக் கூறியுள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்துக் கடவுளான ராமருக்கு வட இந்தியாவின் அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடவுள் ராமரின் பிறப்பிடம் குறித்து பல சர்ச்சையான கருத்துகள் எழுந்து வருகின்றன. இதேபோல் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா கூறுகையில், ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி அல்ல என்றும். நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள அயோத்தி என்ற சிறிய கிராமம் என்றும் கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனை தொடர்ந்து நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் கே.பி சர்மா எந்த அரசியல் நோக்கத்தோடு இந்த கருத்தை தெரிவிக்க வில்லை எனவும், இந்த கருத்தால் அயோத்தியில் மாண்பு எந்த வகையிலும் குறையாது எனவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சை ஓய்ந்தது. ஆனால் தற்போது உத்திரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் கூறுகையில், கடவுள் ராமர் நிஷாத் வம்சாவளியை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் அன்ஷு அவாஸ்தி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பாரதிய ஜனதா நிஷாத் மக்களின் படகை இடிக்கும் போது இவர் என்ன செய்துக்கொண்டு இருந்தார்.? எனவும் வினா எழுப்பினார். ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்த கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.