Categories
தேசிய செய்திகள்

 தசரா,தீபாவளி போன்ற பண்டிகைகள்… ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?…!!!

அமல்படுத்தப்படும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தளர்வுகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்துவதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தத் தளர்வுகளில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் நாடக இசை நடன அரங்குகள் ஆகியவை திறப்பதற்கு அனுமதி அளிக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பான பல்வேறு தளர்வுகள் வழங்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் விரைவில் வர உள்ளதால் கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |