Categories
தேசிய செய்திகள்

தசரா ஊர்வலத்திற்குள்… திடீரென புகுந்த வாகனம்… தூக்கி வீசப்பட்ட மக்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

தசரா ஊர்வலத்தின்போது அதிவேகமாகப் அந்த வாகனத்தால் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் பாதல்கானில் இன்று தசரா ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது மோதியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதில் படுகாயமடைந்த நபர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஊர்வலத்தில் புகுந்து உயிர் சேதம் ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து தாக்கினர். மேலும் வாகனத்தையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |