மைசூரில் தசரா திருவிழா ஊர்வலத்தை நேற்று அம்மாநில முதல் மந்திரி தொடங்கி வைக்கிறார். இதில் 400 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மைசூருவில் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் காவல் தெய்வமாக கருதப்படும் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனை கொண்டாடும் விழாவாக இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 411 ஆவது தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் இந்த விழாவில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து விழா தொடங்கப்படும். மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் தசரா திருவிழா எளிமையாகத் தான் கொண்டாடப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மைசூர் அரண்மனையில் மட்டும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் அரண்மனையில் பாரம்பரிய வழக்கப்படி பல்வேறு பூஜைகள் தொடங்க இருக்கின்றன. அதில் ராஜ உடையில் இளவரசர் மற்றும் ராணி கலந்து கொள்வார். இந்த ஊர்வலத்தை அரண்மனை முன்பு வைத்து பிரத்தியேக மேடையில் ஏறி முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். ஊர்வலத்தில் கொரோனா பரவல் காரணமாக 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தசரா ஊர்வலத்தில் 6 யானைகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.