திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது 17 வயதுடைய மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நந்தம்பாக்கம் பகுதியில் வசிக்கும் கரண் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 17 வயதுடைய சிறுமியை கரண் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் கரணை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.