கூலி தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முள்ளங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்1குமார் என்பவரை ரோட்டில் நின்ற நாய் குறைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் நாயை குறைக்க சொன்னது மணி என கூறி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.