ஆதித்த கரிகாலன் தஞ்சைக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் வந்திய தேவன் பதில் அளித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்ற செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் என பலர் கலந்து கொண்டார்கள். இத்திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் விக்ரம் தனது ட்விட்டர் ஹேண்டிலின் பெயரை ஆதித்த கரிகாலன் எனவும் த்ரிஷா குந்தவை எனவும் மாற்றியிருக்கின்றார்.
இந்த நிலையில் ஆதித்த கரிகாலனாக ட்விட்டர் பதிவிட்ட விக்ரம், சரி தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்படம் தொடங்கும் பெருவுடையாரின் ஆசி வேண்டும் அல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்திய தேவன் வருவான். என் நண்பா வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்துவா என பதிவிட்டிருக்கின்றார். இதை பார்த்த கார்த்தி குசும்பாக இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் தீரவில்லை. எனக்கு தற்பொழுது காய்ச்சல் இருப்பதால் நான் வீட்டில் இருந்து வேலை செய்கின்றேன். வீடியோ காலில் இளவரசியிடம் பேசி சாரி சொல்லிவிடுகின்றேன் என பதிவிட்டு இருக்கின்றார். இதை அனைத்தையும் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.