Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சைப்பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுக்களை நீக்கி ஹிந்தி கல்வெட்டுக்கள் பதிப்பு “தொல்லியல் துறை விளக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும்  செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தஞ்சை பெரிய கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சுவர்களில்  பழமையான தமிழ் எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு,அதற்க்கு பதிலாக  அங்கு புதிய ஹிந்தி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் பொருத்தப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் காணொளி ஒன்று  பரவி வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்து தொல்லியல் துறையினர், அதற்கான விளக்கம் அளித்துள்ளனர் அவர்கள் கூறியதாவது,.தஞ்சைப் நிலப்பகுதியை முதலில் சோழ மன்னர்களும்  பின் மதுரை நாயக்கர் மன்னர்களும் ஆட்சிபுரிந்துள்ளனர். அவர்களுக்குப் பின் மராட்டிய  மன்னர்கள் தஞ்சையை , 17ஆம் நூற்றாண்டில் ஆண்டனர். அதன்பின் ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் ஆட்சி நடைபெற்றது.

இந்நிலையில், தஞ்சையை ஆண்ட ஒவ்வொரு அரச குடும்பத்தை சேர்ந்தவர்களும் தங்களது மொழியில் கல்வெட்டுகளை செதுக்கி வைத்துள்ளனர். ஆகையால் மராட்டியர்கள் ஆண்ட காலத்தில்  பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளே சமூக வலைதளங்களில் பரவும் காணொளியில் காட்டப்படுபவை என்றும் மேலும் அவை ஹிந்தி மொழியல்ல , மராட்டிய மொழியைச் சேர்ந்த தேவநாகரி எழுத்துகள் என்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள்  கூறுகின்றனர்.

 

Categories

Tech |