தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 74 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 47 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மேலும் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து சிகிச்சையில் தற்போது 21 பேர் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல, மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,134 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தமிழக முழுவதும் 83 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேர், கும்பகோணம், திருவையாறு, நெய்வாசல், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேரும் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 14 நாட்கள் வீட்டில் சுய தனிமையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.