Categories
உலக செய்திகள்

தஞ்சையில் தொலைந்து போன புராதன பைபிள்…. பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு….!!!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து தொலைந்து போன தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மியூசியத்திலிருந்து கடந்த 2005-ல் தொலைந்துபோன 300 வருட பழமையான புராதன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தஞ்சையின் மன்னராகயிருந்த சரபோஜிமன்னரின் கையெழுத்திட்ட அந்த பைபிள் சென்ற 2005-ல் தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் உலகம் முழுதும் புராதனபொருட்கள் உள்ள இணையதளங்களை ஆய்வு மேற்கொண்டதில் பைபிளானது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லண்டனிலுள்ள பைபிளை, யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் வாயிலாக தமிழகத்திற்கு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து அந்த பைபிளை திருடிச்சென்றது யார் என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் நாகையில் புது ஏற்பாடு பைபிளை முதன் முறையாக மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |