உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ள தஞ்சை பொறியியல் மாணவருக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கும் தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் திரு.ரியாஸ்தீனை பாராட்டியுள்ளார்.
இந்த மாணவர் கண்டறிந்த விஷன் சாட் V1 மற்றும் V2 ஆகிய இரண்டு Femto செயற்கைக் கோள்களை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ இருப்பது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமையாகும் என குறிப்பிட்டுள்ள திரு.டிடிவி தினகரன், இந்தச் சாதனையைப் புரிந்துள்ள தம்பி ரியாஸ்தீன், விண்வெளித்துறையில் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க மனப்பூர்வமாக வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.