Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே….10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் … மாணவன் கைது..!!

திருவையாற்றில் சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி  மாணவன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவையாறில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. அம்மாணவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். சம்பவ தினத்தன்று அம்மாணவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார் .

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த டாக்டர் மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |