தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது.
இதனை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனையடுத்து உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் எப்பொழுதும் சமஸ்கிருதத்தில் மட்டும் அர்ச்சனை செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழில் மந்திரங்கள் முழங்குவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.