தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதிகளில் வரும் பத்தாம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது என உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் வரும் 10-ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
இதனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லிதோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பணங்காடு, எடவாக்குடி, யாகப்பாசாவடி, அம்மாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.