தஞ்சை-விக்கிரவாண்டி இடையிலான புதிய சாலையில் ஆயிரம் மர கன்றுகள் நடும் திட்டத்தை வன அலுவலர் தொடங்கி வைத்தார்.
தஞ்சை- விக்கிரவாண்டி இடையே புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் இந்த சாலையில் ஒரு பிரிவாக தஞ்சை அடுத்துள்ள சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் இருந்து தொடங்குகின்றது. இந்தநிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வரை 30 கிலோமீட்டர் தூரம் செல்கின்றது.
இந்நிலையில் புதியதாக அமைக்கப்படும் இச்சாலையில் இருபுறமும் மரக்கன்று நட நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தஞ்சை அடுத்திருக்கும் கடகடப்பை கிராமத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழாவானது நடந்தது. இதில் வனத்துறை அலுவலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்